/ தினமலர் டிவி
/ பொது
/ சேலத்தில் தபால் ஓட்டுக்கு கட்சியினர் கவனிப்பு! DMK | ADMK | Postal Vote | Election 2024
சேலத்தில் தபால் ஓட்டுக்கு கட்சியினர் கவனிப்பு! DMK | ADMK | Postal Vote | Election 2024
சேலம் மாவட்டத்தின் 11 சட்டசபை தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர், 5,711 வாக்காளர்கள்; மாற்றுத்திறனாளிகள், 3,691 பேர் என மொத்தம், 9,402 பேர் உள்ளனர். அவர்கள் தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பட்டியல், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அந்த பட்டியலின் அடிப்படையில் சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி சட்டசபை தொகுதிகளில் உள்ள தபால் ஓட்டுகளுக்கு தி.மு.க. 1,000 ரூபாயும், அ.தி.மு.க. 500 ரூபாயும் வழங்கினர். பா.ம.க.வினர் பிரசாரத்துடன் முடித்துக் கொண்டனர்.
ஏப் 06, 2024