உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்|Eps|Admk|sengottaiyan

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்|Eps|Admk|sengottaiyan

சில மாதங்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் பேசியது அக்கட்சியில் விவாதத்தை உருவாக்கியது. அப்போதுதான் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என கூறி அதிமுக பொது செயலர் பழனிசாமிக்கு 10 நாள் கெடுவும் விதித்திருந்தார். ஆனால் அவரது கட்சி பதவிகளை பழனிசாமி பறித்தார். அதன் பின் இந்த பிரச்னை பெரிதாக எழவில்லை. நேற்று நடந்த பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலர் தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். அவர்களுடன் நெருக்கமாக காட்டி கொண்ட அவர் ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணித்தார். செய்தியாளரின் கேள்விக்கு, என்னை கட்சியை விட்டு நீக்கினால் சந்தோஷம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை பழனிசாமி நீக்கியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை