என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திராணி இருக்கா? | Edappadi Palanisamy | ADMK | CM Stalin | DMK |
மத்திய அரசை கண்டித்து திருவள்ளூரில் திமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முந்தய ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகளை டில்லி காலடியில் அடகு வைத்ததாக அதிமுகவை விமர்சித்தார். முதல்வரின் பேச்சை கண்டித்து எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான பழனிசாமி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாக பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு, இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது. கட்சி தோன்றியதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல் , இன்று கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, இப்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவுக்கு, அதிமுகவை பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா? டில்லியில் தமிழகத்தை அடகு வைத்தது யார்? மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்? நீட் என்ற சொல்லை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? சுப்ரீம் கோர்ட் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் ? அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?