உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோடு அருகே அதிகாலையில் நடந்த பகீர் சம்பவம் | Erode | Bhavanisagar Check Post

ஈரோடு அருகே அதிகாலையில் நடந்த பகீர் சம்பவம் | Erode | Bhavanisagar Check Post

ஈரோடு பவானிசாகர் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரிய கள்ளிப்பட்டி செக்போஸ்ட் உள்ளது. வெள்ளியன்று அதிகாலை 2 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இன்னோவா காரில் 5 பேர் இருந்தனர். அதில் ஒரு இளைஞர் என்னை கடத்திச் செல்கின்றனர். காப்பாற்றுங்கள் என கத்தி கூச்சல் போட்டுள்ளார். போலீஸ் அரிஷ்குமார் அந்த கார் அருகே சென்றபோது காரில் இருந்தவர்கள் இவன் ஒரு பைத்தியம்; சும்மா கத்துவான் என கூறிக்கொண்டே காரை மெதுவாக இயக்கினர். சந்தேகமடைந்த ஹரிஷ்குமார் கார் கதவை திறந்து கூச்சலிட்ட வாலிபரை பிடித்து வெளியே இழுத்தார். உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் வந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியது. மீட்கப்பட்ட வாலிபரை பவானிசாகர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் முத்துவின் மகன் இஸ்ரவேல் என்பது தெரியவந்தது. அங்குள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு LLB படித்து வந்துள்ளார். இவரது தந்தைக்கு சொந்தமாக பெங்களூரில் உள்ள வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வெள்ளியன்று மாலை 6 மணி அளவில் கல்லூரி அருகே இருந்த இஸ்ரவேலை காரில் வந்த ஒரு கும்பல் அணுகி இருக்கிறது. நீ முத்துவின் மகன் இஸ்ரவேல் தானே? உங்களுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வந்துள்ளோம். வீடு பிடித்து இருந்தால் உடனே அட்வான்ஸ் வந்து விடுகிறோம் என கூறியுள்ளனர். அவர்கள் சொன்னதை நம்பிய இஸ்ரவேல் அவர்களது காரில் ஏறி இருக்கிறார். ஆனால் கார் அவரது வீட்டுக்கு போகவில்லை. வேறு பாதையில் நகரை விட்டு வெளியேறியது. இஸ்ரவேல் காரை நிறுத்துங்கள் என கத்திய போதும், அவர்கள் காரை நிறுத்தாமல், சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். உன்னுடைய தந்தை முத்து பெரிய கோடீஸ்வரர் என்பது எங்களுக்கு தெரியும். உன் தந்தையிடம் இரண்டு கோடி பணம் கேட்கப் போகிறோம். பணத்தை அவர் தந்துவிட்டால், உன்னை விட்டு விடுவோம் என கூறியுள்ளனர்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ