ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தும் நெட்வொர்க் குறித்து விசாரணை! Ganja Smuggling | Andhra
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆரப்பாளையம் தென்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு சரக்கு வாகனத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 8 மூட்டைகளில் 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தில் இருந்த மதுரை அலெக்ஸ் பாண்டியன், விஜயகுமார், திருச்சி தீபக், கோவை பிரேம்குமாரை கைது செய்தனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஆந்திர மாநில கஞ்சா நெட்வொர்க் குறித்து போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.