உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை மாமன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்! Covai Corporation | GD Naidu

கோவை மாமன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்! Covai Corporation | GD Naidu

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 103 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலில் கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து அவிநாசி சாலையில் 10.1 கி.மீ நீள பாலம் அமைத்து தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பால வேலைகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. இதனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுதத்தினர். இதனை ஏற்க மறுத்ததால் திமுக-அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். #CovaiCorporation #GDNaiduElevatedExpressway #10Point1KMBridge #DMK #ADMK #Transportation #InfrastructureDevelopment #RoadSafety #TamilNadu #SmartCities #UrbanDevelopment #Connectivity #Expressway #BridgeConstruction #LocalGovernment #PublicInfrastructure #EngineeringMarvel #CivicProjects #DevelopmentInTamilNadu #CivilEngineering

அக் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை