/ தினமலர் டிவி
/ பொது
/ கடத்தல் கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள் | Gold smuggled | Srilanka to Ramanathapuram
கடத்தல் கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள் | Gold smuggled | Srilanka to Ramanathapuram
₹4 கோடி தங்க கட்டிகளுடன் காரில் தப்பிய ஆசாமிகள்! ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருக்கிறது. இதனால், சமீப காலமாக இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக நாட்டு படகு மூலம் ராமநாதபுரம் கடற்கரை கிராமங்களுக்கு தங்கம் அதிகளவு கடத்தப்படுவதாக புகார்கள் எழுகிறது. இந்த நிலையில், இலங்கையில் இருந்து ராமநாதபுரம் வழியாக, தங்கம் கடத்தப்படுவதாக மதுரை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்கரை கிராமமான மண்டபம், வேதாளை, களிமண்குண்டு, மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் மறைந்திருந்தனர்.
ஆக 13, 2024