உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழைய கூகுள் மேப்பால் 3 இளைஞர்களுக்கு பரிதாபம் Using Google map leads to Car accident in UP

பழைய கூகுள் மேப்பால் 3 இளைஞர்களுக்கு பரிதாபம் Using Google map leads to Car accident in UP

உத்தர பிரதேசத்தின் பரூக்காபாதை சேர்ந்த நிதின் குமார் மற்றும் அவரது உறவினர் அஜித் குமார் இருவரும் டில்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் கார் டிரைவர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, சனிக்கிழமை இரவு குருகிராமில் இருந்து உபி யிலுள்ள பரேலிக்கு காரில் புறப்பட்டனர். இவர்களுடன் துாரத்து உறவினர் அமித்தும் வந்தார். கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டிச் சென்றனர். பரேலியில் உள்ள டாடகஞ்ச் பகுதியில் ராம்கங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. பாலம் பாதியில் உடைந்திருந்தது. அதுபற்றிய விவரம் கூகுள் மேப்பில் இல்லை. வேகமாக சென்ற கார், உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்தது. காரில் இருந்த மூவரும் உயிரிழந்தனர். நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்துள்ளது. ஞாயிறு அதிகாலை தான் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூவரின் உடல்களையும் காரையும் மீட்டனர்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை