பகீர் கிளப்பும் ஹெஸ்புலா உச்ச தலைவன் நஸ்ரல்லா இறுதிச்சடங்கு | Hassan Nasrallah funeral | Israel vs
லெபனானில் தீவிரமாக நடந்து வந்த இஸ்ரேல், ஹெஸ்புலா போர் டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இந்த போரில் ஹெஸ்புலா பெருத்த அடியை சந்தித்தது. தெற்கு லெபனான் மற்றும் தலைநர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் இருந்த ஹெஸ்புலா முகாம்களின் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் அழித்து விட்டது. போரில் நூற்றுக்கணக்கான ஹெஸ்புலாக்களையும், முக்கிய தளபதிகளையும் இஸ்ரேல் ராணுவம் தீர்த்துக்கட்டியது. எல்லாவற்றுக்கும் மேலாக ஹெஸ்புலாவின் உச்ச தலைவன் ஹசன் நஸ்ரல்லாவையே துல்லிய தாக்குதலில் கொலை செய்தது. செப்டம்பர் மாதம் 27ம் தேதி தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் நஸ்ரல்லா கொல்லப்பட்டான். கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகியும் நஸ்ரல்லாவுக்கு ஹெஸ்புலா இறுதிச்சடங்கு நடத்தவில்லை. அவனது உடலை ஏற்கனவே இறந்த மகன் கல்லறை பக்கத்தில் தற்காலிகமாக ஹெஸ்புலாக்கள் அடக்கம் செய்தனர். இப்போது சடலத்தை எடுத்து மிகப்பெரிய அளவில் இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் வைத்து பிரமாண்ட இறுதிச்சடங்குக்கு நடத்தி நஸ்ரல்லா உடலை அடக்கம் செய்ய உள்ளனர்.