/ தினமலர் டிவி
/ பொது
/ கனமழையால் வடகிழக்கு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Heavy Rain at North East | Assam Flood| Si
கனமழையால் வடகிழக்கு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Heavy Rain at North East | Assam Flood| Si
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சிக்கிமின் வட பகுதிகளில் பெய்யும் கன மழையால் முக்கிய நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. முக்கிய சுற்றுலா மையமான, லாசென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் மாயமாகினர். மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து லாசென் துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மட்டுமே அங்கு செல்ல முடியும். அங்கு சிக்கித் தவித்த, 30 பேரை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் மீட்டனர். இன்னும் 113 பேர் அங்கு சிக்கி உள்ளனர். ஆனால், அவர்களை மீட்க சென்ற ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலையால், பாதி வழியில் திரும்பி வந்தன. மீட்பு பணியை துரிதப்படுத்த கூடுதல் ராணுவ படை சிக்கிம் விரைந்தது.
ஜூன் 04, 2025