உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூரில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேதனை | Tiruppur | Rain | House Collapse

திருப்பூரில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேதனை | Tiruppur | Rain | House Collapse

கையெடுத்து கும்புடுறேன்.. கதறும் மாற்றுத்திறனாளி பெண்! ஒரே நாள் இரவில் உடைந்த கனவு திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராதா. மாற்றுதிறனாளியான இவர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். இவரது கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். ராதாவின் வருமானத்தை நம்பியே குடும்பம் உள்ளது. இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் கட்டி தரப்பட்ட தொகுப்பு வீட்டில் வசிக்கின்றனர். சேதமடைந்து காணப்பட்ட ராதாவின் வீடு நேற்று பெய்த கனமழையில் முழுவதுமாக இடிந்தது. கணவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடும் இடிந்துவிட்டது. என்ன செய்வதென்றே புரியவில்லை. அரசு உதவ வேண்டும் என கண் கலங்கி பேசினார் ராதா.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி