புதிய மைல்கல்லை எட்டியதாக ராஜ்நாத்சிங் பாராட்டு
DRDO எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, நீண்டதூரம் சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை ஒடிசாவின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது. உள்நாட்டு தயாரிப்பான இந்த ஏவுகணை 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. breath நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ராணுவ தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். இது ஒரு வரலாற்று தருணம்; இந்த சாதனையானது, மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை கொண்டுள்ள சில நாடுகளின் குழுவில் இந்தியாவையும் சேர்த்துள்ளது. டிஆர்டிஓ, ஆயுதப்படை, தொழில்துறைக்கு வாழ்த்துகள் என ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.