/ தினமலர் டிவி
/ பொது
/ கள்ளக்குறிச்சி சம்பவம் இனி நடக்கவே கூடாது Illicit liquor | Kalla kurichi | high court | Suo Motu |
கள்ளக்குறிச்சி சம்பவம் இனி நடக்கவே கூடாது Illicit liquor | Kalla kurichi | high court | Suo Motu |
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 65 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக ஐகோர்ட் நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் இன்று அறிவித்தனர். மூத்த வக்கீல் தமிழ்மணி டிவி விவாதம் ஒன்றில் பேசும்போது கல்வராயன் மலை மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து பல்வேறு உண்மைகளை கூறினார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது. தலித்துகள், பழங்குடி மக்களின் சமூக பொருளாதார நிலையை பாதுகாக்க வேண்டி நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொள்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜூலை 01, 2024