காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் முக்கிய அப்டேட் | IMD | Chennai Weather | Rain | Low Pressure Area
21ம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதன் எதிரொலியாக தென்கிழக்கு வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால் நாகை மீனவர்கள் கடலுக்குச் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இது தவிர தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதியின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உட்பட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 25ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.