உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மறுபடியும் அடிப்போம்! பாகிஸ்தானுக்கு இந்தியா மெசேஜ் ind vs pak | ind vs us | pahalgam | asim munir

மறுபடியும் அடிப்போம்! பாகிஸ்தானுக்கு இந்தியா மெசேஜ் ind vs pak | ind vs us | pahalgam | asim munir

இந்தியாவுடன் போரில் தோற்ற பிறகு அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது பாகிஸ்தான். போர் முடிந்த மறு மாதமே வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த மதிய விருந்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பங்கேற்றார். பயங்கரவாதிகளை தூண்டி விடும் ஒரு நாட்டின் ராணுவ தளபதிக்கு டிரம்ப் விருந்து கொடுத்தது இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் 2வது முறை அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் செய்தார் அசிம் முனீர். அங்கு சென்றவர் புலம்பெயர்ந்த பாகிஸ்தானியர்கள் முன்பு இந்தியாவுக்கு எதிராக வீராவேசமாக பேசினார். எங்களை யாராவது வீழ்த்த நினைத்தால், உலகின் பாதியை நாங்கள் வீழ்த்தி விடுவோம். ஏனென்றால் பாகிஸ்தான் அணு ஆயுத நாடு என்று இந்தியாவுக்கு பகிரங்கமாக மிரட்டினார். சிந்து நதி விவகாரத்திலும் அடாவடி காட்டினார். ‛இந்தியா சிந்து நதி குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று காத்திருக்கிறோம். அவர்கள் கட்டி முடித்ததும், அதில் 10 ஏவுகணைகளை வீசி தகர்ப்போம். பாகிஸ்தானுக்கு ஏவுகணைக்கா பஞ்சம் என்று வாய் கொழுப்பில் பேசினார். இதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இப்போது நம் வெளியுறவு துறை பாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்துள்ளது. அவர் கூறியது: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தலைமையில் இருந்து பொறுப்பெற்ற மற்றும் வெறுக்கத்தக்க கருத்துகள் வருகின்றன. போர் வெறி நிரம்பி வழியும் அறிக்கைகளை அடிக்கடி பார்க்கிறோம். இந்தியாவுக்கு எதிராக வீராவேசமாக பேசி பிரச்னையை தூண்டுவதன் மூலம் பாகிஸ்தான் தனது சொந்த தோல்வியை மறைக்க முயற்சிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு தவறான விளையாட்டும், பாகிஸ்தானுக்கு வேதனையான விளைவை ஏற்படுத்தும். சமீபத்தில் நடந்த போரில் கூட அந்த வேதனையை பாகிஸ்தான் அனுபவித்தது என்று பாகிஸ்தானை போரில் பந்தாடியது பற்றி வெளியுறவுத்துறை கூறியது. பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்ததுமே, பாகிஸ்தானை இந்தியா எச்சரித்தது. உண்மையிலேயே பாகிஸ்தான் ராணுவம் வசம் தான் அணு ஆயுத கிடங்கின் கட்டுப்பாடு இருக்கிறதா. அல்லது பயங்கரவாதிகள் வசம் போய் விட்டதா என்று கேள்வி எழுப்பியது.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ