ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் இந்தியாவுக்கு மகத்தான வாய்ப்பு
இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே, 18 ஆண்டுகால பேச்சுக்கு பின், தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு முடிந்துள்ளது. அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என பெயரிடப்பட்ட முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தாண்டுக்குள் அது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும். இந்த ஒப்பந்தம், தொலைநோக்கு பார்வையுடன் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறும்போது, ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் முதலீடு கிட்டத்தட்ட 40 பில்லியன் யூரோக்களை எட்டி இருக்கிறது. ஆராய்ச்சி, உற்பத்தி, சேவைகள் என ஒவ்வொரு துறையிலும் இந்தியா ஐரோப்பிய நிறுவனங்கள் இடையே ஆழமான ஒத்துழைப்பு இருக்கிறது. விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய பொருட்கள் ஐரோப்பிய சந்தைக்கு எளிதாக கொண்டு செல்லப்படும். #IndiaEUSummit2026 #ModiInEU #FreeTradeAgreement #StrategicPartnership #GlobalGateway #IndiaRising #EUTandem #Geopolitics #MakeInIndia #EuropeIndiaTrade #SecurityAndDefense #CleanEnergyTransition #HorizonEurope #GlobalStability #DiplomacyInAction