ஆபரேஷன் சிந்தூர் பற்றி ரஷ்யாவில் இந்திய எம்பிக்கள் குழு விளக்கம் Operation Sindhoor| Kanimozhi| Trum
ரஷ்யா சென்றுள்ள, திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் குழு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி அந்நாட்டு அரசு பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர். பயங்கரவாதத்தை வேரறுக்கும் இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா பாராட்டியதுடன், சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தி, ஆணு ஆயுத போரை தடுத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதை மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக்கொண்டதன் காரணமாகவே சண்டையை நிறுத்தியதாக விளக்கம் அளித்தது. எனினும் டிரம்ப் திரும்ப திரும்ப அதையே பேசி வருவதால், அது பற்றியும், நமது எம்பிக்கள் குழுவினர் ரஷ்யாவில் விளக்கம் அளித்தனர். எம்பி கனிமொழி கூறும்போது, பாகிஸ்தான் வேறு வழியின்றி சண்டை நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தது. இதற்கு வேறு எந்த நாடுகளின் தலையீடும் காரணம் அல்ல. இரு நாடுகள் இடையே அசாதாரண சூழல் நிலுவும் போதும், பிற நாட்டின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பேசுவது வழக்கம்தான். பிரதமர் மோடி, ரஷ்ய பிரதமருடன் பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடியுடன் பேசினார். சுதந்திரமான இருநாடுகள், தங்களுக்குள் உள்ள பிரச்னைகளுக்கு தாங்களே தான் முடிவு காணும் என கனிமொழி கூறினார்.