உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலை தாக்கியது யார்? ஹமாஸ் இல்ல ஹிஸ்புல்லா இல்ல Israel vs Hezbolla | Israel video | Houthi attack

இஸ்ரேலை தாக்கியது யார்? ஹமாஸ் இல்ல ஹிஸ்புல்லா இல்ல Israel vs Hezbolla | Israel video | Houthi attack

11 மாதங்கள் முன்பு காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து இஸ்ரேல் போரை துவங்கியது. ஹமாசுக்கு ஆதாரவாக லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அடிக்கடி வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி வந்தது. கிட்டத்தட்ட ஹமாஸ் கட்டமைப்புகளை தகர்த்து விட்ட நிலையில், லெபனானில் குடைச்சல் கொடுத்து வந்த ஹிஸ்புல்லா பக்கம் இஸ்ரேல் கவனம் திரும்பியது. ஒரு வாரமாக ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தெற்கு லெபனானிலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்தில் முக்கிய தளபதிகள் உட்பட 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஹமாஸ், ஹிஸ்புல்லாவை குறி வைத்து அடிக்கும் இஸ்ரேல் தலையில் இடியை இறக்கும் வகையில் புதிய தாக்குதல் சம்பவங்கள் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஹமாசும், ஹிஸ்புல்லாவும் அவ்வப்போது குண்டு வீசி வரும் நிலையில் தெற்கு இஸ்ரேலின் ஈலாட் நகர் மீது ட்ரோன் குண்டுகள் பறந்து வந்தன. அதை ஹமாசும் வீசிவில்லை; ஹிஸ்புல்லாக்களும் வீசவில்லை. மாறாக, ஈராக்கில் இருந்து அந்த ட்ரோன் குண்டுகள் பறந்து வந்தன. உடனே ஈலாட் நகரில் சைரன் சத்தம் ஒளித்தது. இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். அதற்குள் ஒரு ட்ரோன் குண்டை இஸ்ரேல் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் குண்டு வழிமறித்து வானிலே தாக்கி அழித்தது.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி