ஜல்லிகட்டு போட்டியை உற்சாகமாக கண்டு ரசிக்கும் மக்கள்! | Jallikattu | Pongal | Navalur | Trichy
திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் தை மாதம் 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த ஆண்டும் முறையாக அனுமதி பெற்று ஜல்லிகட்டு போட்டி துவங்கியது. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, கோட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு போட்டியை துவக்கி வைத்தனர். இதில் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரத்துடன் அடக்க காளையர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் தங்ககாசு, வெள்ளிகாசு, பிரிட்ஜ், டிவி, பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்ஸி, பேன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஜல்லிகட்டு போட்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.