காஷ்மீரில் ராணுவத்தில் சேர குவிந்த 26,000 இளைஞர்கள் | Jammu and Kashmir | Indian Army
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நவம்பர் 8ல் தொடங்கி 17 வரை நடந்தது. 307 ராணுவ வீரர்கள், 45 கிளார்க் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் 26,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. இது குறித்து பேசிய ராணுவ அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராணுவத்தில் காஷ்மீர் இளைஞர்கள் சேர்வதை ஊக்குவிப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. 4,000 பேர் உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றனர். வெளிப்படையான முறையில் காஷ்மீர் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றனர். இதுதவிர, தீவிரவாத தாக்குதல்களில் இருந்து மக்களைக் காக்க காஷ்மீரில் ஒரு புதிய திட்டத்தை ராணுவம் கொண்டு வந்துள்ளது. உள்ளூர் போலீஸ், ஊர் மக்களுடன் இணைந்து கிராம பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கி உள்ளது. இதில் மொத்தம் 600 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.