கணிப்புகளை பொய்யாக்கி ஆட்சியை பிடித்த இண்டி கூட்டணி Jharkhand Elections 2024 INDIA wins NDA trailing
81 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பின் பல டிவி நிறுவனங்கள் எடுத்த கருத்து கணிப்புகள் பாஜ கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்திருந்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பறிகொடுக்கும் என கருத்துக் கணிப்புகள் வந்தன. கருத்துக் கணிப்பு முடிவுகளைபோலவே ஆரம்பத்தில் பாஜ கூட்டணிதான் அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. ஜார்க்கண்ட் முழுவதும் பாஜ தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் செல்ல செல்ல நிலைமை தலைகீழாக மாறியது. ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி மீண்டும் முன்னிலை பெற துவங்கியது. 11 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 81 இடங்களில் 49 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் அடங்கிய இண்டி கூட்டணி முன்னிலையில் இருந்தது. பாஜ கூட்டணி 30 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தன. ஜார்க்கண்ட் தேர்தல் மொத்த இடங்கள் 81 மெஜாரிட்டி 41 இண்டி கூட்டணி 49 பாஜ கூட்டணி 30 மற்றவை 2 கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஜார்க்கண்ட்டில் ஆட்சியை தக்க வைக்கிறது. பாஜ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்ததால், மகிழ்ச்சியில் திளைத்திருந்த பாஜ தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.