உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சிபுரம் மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் தீ பிடித்ததால் பதற்றம் | Kanchipuram GH | Fire

காஞ்சிபுரம் மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் தீ பிடித்ததால் பதற்றம் | Kanchipuram GH | Fire

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். சிலர் உள்நோயாளியாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இங்குள்ள குழந்தைகள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திடீரென மின்கசிவு காரணமாக மின்வயரில் தீப்பிடித்தது. சுமார் இரண்டு அடி உயரத்திற்கு புகையுடன் தீ பரவியதால், தாய்மார்கள் அலறியடித்து கொண்டு குழந்தைகளுடன் வெளியேறினர்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி