கரூர் சம்பவத்தில் TVK முக்கிய புள்ளி மீது வழக்கு | karur stampede | tvk vijay rally stampede|anand
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 39 பேர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. இந்த கோர சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலையைில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கரூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதியழகன் பெயர் ஏ1, ஆனந்த் பெயர் ஏ2 ஆக சேர்க்கப்பட்டுள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, அரசின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் போனது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.