உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜயை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் போலீஸ்-பரபரப்பு karur stamped | vijay caravan | tvk karur issue

விஜயை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் போலீஸ்-பரபரப்பு karur stamped | vijay caravan | tvk karur issue

கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் விஜய் மற்றும் அவரது கட்சியினருக்கு எதிராக அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக விஜய் கரூர் நோக்கி செல்லும் போது, தவெக தொண்டர்கள் வந்த 2 பைக் அடுத்தடுத்து பிரசார வேனில் சிக்கி விபத்துக்குள்ளானது தொடர்பாக கடுமையாக கேள்வி எழுப்பியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தீர்களா, பிரசார கேரவனை பறிமுதல் செய்தீர்களா என்று போலீசாரை பார்த்து அடுக்கடுக்கான கேள்விகளை கோர்ட் எழுப்பியது. இப்படி வழக்கு பதிவு செய்யாமல் இருந்தால் போலீஸ் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விஜய் பிரசார கேரவனை போலீசார் பறிமுதல் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அக் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ