உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கெஜ்ரிக்கு ஜாமின் கிடைச்சும் ஜெயில்: என்ன ஆச்சு? | Kejriwal gets interim bail | liquor policy scam

கெஜ்ரிக்கு ஜாமின் கிடைச்சும் ஜெயில்: என்ன ஆச்சு? | Kejriwal gets interim bail | liquor policy scam

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைது சட்ட விரோதமானது என்று கூறி டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடுத்தார். அமலாக்கத்துறை நடவடிக்கையில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று கூறி அவரது மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். விசாரணைக்கு ஊடே லோக்சபா தேர்தலுக்காக ஒரு முறை அவருக்கு கிடைக்கால ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட். பின்னர் மீண்டும் திகார் சிறைக்கு சென்றார். இன்னொரு புறம் நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, தீபங்கர் தத்தா முன்னிலையில் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பு வழங்கினர். 90 நாட்களுக்கு மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் இடைக்கால ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ