பூம்பாறை முருகன் கோயில் பக்தர்கள் கொதிப்பு | Kuzhandhai Velappar | HRCE
தட்டு பணத்தை கூட விடுவதில்லை தட்டி பறிக்கிறது அறநிலைய துறை பழனி முருகன் கோயிலுக்கு கீழ் 30க்கும் மேற்பட்ட உப கோயில்கள் உள்ளது. கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலும் ஒன்று. இங்கு அர்ச்சகரின் தட்டில் பக்தர்கள் விருப்பப்பட்டு செலுத்தும் பணத்தை உண்டியலில் போட அறநிலையத்துறை அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். பக்தர்களின் வருகையை கண்காணித்து உண்டியலில் பணம் செலுத்த மூன்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் வைத்து அர்ச்சகர்கள் கண்காணிக்கின்றனர். பக்தர்கள் விரும்பி தட்டில் பணம் கொடுத்தாலும் விளக்கம் கேட்டு அர்ச்சகர்களுக்கு கடிதம் அனுப்பப்படும் அவல நிலை தொடர்கிறது.
அக் 29, 2024