லண்டனில் ஆடம்பர பார்ட்டி தந்த லலித் மோடி Lalit modi |party with vijay mallya | London
இந்தியன் பிரீமியர் லீக் முன்னாள் தலைவரான லலித் மோடி மீது நிதி முறைகேடு, ஐபிஎல் ஏல மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட கோர்ட் வழக்குகளை சந்திக்கும் அவர், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் 2010ல் இங்கிலாந்து சென்று லண்டனில் வாழ்கிறார். இதே போல் 9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கில் சிக்கி உள்ள கிங் பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் மது ஆலை உரிமையாளரான விஜய் மல்லையாவும் 2016 முதல் லண்டனில் வசிக்கிறார். பொருளாதார குற்றங்கள் நிகழ்த்திய இவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மத்திய அரசு சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் லலித்மோடி தனது லண்டன் வீட்டில் நண்பர்களுக்கு கோடை விருந்து வைத்திருப்பது கடும் பேசுபொருளாகி உள்ளது. ஜூன் 29ல் நடந்த இந்த விருந்தில் விஜய் மல்லையா, ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்ட் கெயில், லலித் மோடி குடும்பத்தினர், நண்பர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.