உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கர்; நீதிபதி போட்ட உத்தரவு

கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கர்; நீதிபதி போட்ட உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவின் கரூர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விஜயபாஸ்கர் அபகரித்து விட்டதாக, மேல கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், அவரை கேரளாவில் வைத்துகைது செய்தனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் விஜயபாஸ்கர் அடைக்கப்பட்டார். இதனிடையே, கரூர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குக்காக எம்.ஆர். விஜயபாஸ்கரை 2வது முறை கைது செய்த போலீசார், கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மகேஷ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ