உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புனித நீராடி கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் சாதுக்கள் |

புனித நீராடி கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் சாதுக்கள் |

MahaKumbhamela| Prayagraj| Uttar Pradesh Tourism| Ganga Arati| Tiruveni Sangham உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வரும் 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடைபெற உள்ளது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை கூடும் இடத்தில், பூமிக்கடியில் இருந்து சரஸ்வதி நதியும் இணைவதாக ஐதீகம். 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பமேளா திருவிழா பிரமாண்ட முறையில் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து புனித நீராடுவர். மகர சங்கராந்தியான ஜனவரி 14ம் தேதி, கும்மேளாவில் பங்கேற்கும் சாதுக்கள், சன்னியாசிகள் மட்டுமின்றி பொதுமக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கங்கை ஆரத்தியில் பங்கேற்பர். ஜனவரி 29 மவுனி அமாவாசை நாளில் ஏராளமானோர் திரிவேணி சங்கமத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !