உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீனா, அமெரிக்காவுடன் இந்தியா உறவு எப்படி உள்ளது? MEA Jaishankar on Bangladesh| Jaishankar Comment O

சீனா, அமெரிக்காவுடன் இந்தியா உறவு எப்படி உள்ளது? MEA Jaishankar on Bangladesh| Jaishankar Comment O

டில்லியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடந்த ரைசிங் பாரத் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் பிரதமர் நேருவுக்கு பின் தொடர்ந்து நீண்ட நாட்கள் வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வகிப்பவர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜெய்சங்கர், வங்கதேச கலவரம், இந்தியா - சீனா உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். வங்கதேசத்தில் தற்போதுள்ள நிலை கவலை அளிக்கிறது. அங்கு சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். ஏனென்றால், வங்க தேசத்தின் நலனில் வேறெந்த நாடுகளையும் விட நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அது நம் டிஎன்ஏவில் உள்ளது. வங்கதேசத்தில் அமைதி திரும்பவும், நிலையான ஆட்சி அமையவும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக ஆட்சி மலர முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ