உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெருக்கடி நிலையிலும் ஆபத்தை தவிர்த்த விமானி MiG-29 fighter jet | Crashed | Agra field | IAF

நெருக்கடி நிலையிலும் ஆபத்தை தவிர்த்த விமானி MiG-29 fighter jet | Crashed | Agra field | IAF

வயலில் விழுந்து எரிந்தது விமானப்படை விமானம்! பைலட் தப்பியது எப்படி? இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானம், பஞ்சாபின் ஆடம்பூரில் இருந்து பயிற்சிக்கு பறந்தது. விங் கமாண்டர் மணீஷ் மிஸ்ரா பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரின் மேலே பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சில கண்ட்ரோல்கள் செயல் இழந்த நிலையில், விமானத்தை கமாண்டர் கைவிட நினைத்தார். மக்கள் நடமாட்டம் வீடுகள் இல்லாத இடத்தை நோக்கி விமானத்தை செலுத்தினார். நிலைமை கைமீறி போகவே பாராசூட் மூலம் கீழே குதித்தார். போர் விமானம் ஆக்ராவின் அருகே உள்ள பாகா சோனிகா Bagha Sonigha என்ற கிராமத்தின் வயலில் வந்து விழுந்து தீப்பிடித்து கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூட்டமாக திரண்டனர்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை