மோடி-டிரம்ப் திட்டம் என்ன? வெள்ளை மாளிகை பரபர தகவல் Trump Modi talks | Modi US visit | white house
அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். அமெரிக்கா மட்டும் இன்றி உலக நாடுகளையே அதிர வைக்கும் பல தடாலடியான உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று அவரிடம் பிரதமர் மோடி பேசினார். இது தொடர்பாக மோடி சிறிய அறிக்கையும் வெளியிட்டார். நண்பர் டிரம்ப் உடன் பேசியதில் மகிழ்ச்சி. இரண்டாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தியா, அமெரிக்காவுக்கு பரஸ்பர நன்மை தரும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்காகவும் சேர்ந்து வேலை பார்ப்பது என்று இருவரும் முடிவெடுத்ததாக மோடி சொல்லி இருந்தார். இந்த நிலையில் டிரம்ப்-மோடி உரையாடல் தொடர்பாக இப்போது வெள்ளை மாளிகையும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது: அதிபர் டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் தொலைபேசியில் உரையாடினர். இந்தியா, அமெரிக்கா இடையே நம்பிக்கையான மற்றும் நியாயமான வர்த்தக உறவு இருக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்காவின் ஆயுதங்களை இந்தியா அதிகளவில் வாங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் மோடியிடம் டிரம்ப் எடுத்துரைத்தார். இந்தியா, அமெரிக்கா இடையேயான எல்லா விவகாரங்களிலும் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதை இரு தலைவர்களும் உறுதி செய்தனர். இந்தோ பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் விவாதித்தனர். மோடியின் அமெரிக்க பயணம் குறித்தும் ஆலோசித்தனர் என்று வெள்ளை மாளிகை கூறியது. இந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடியின் வாஷிங்டன் விசிட் பற்றியும் ஆலோசித்தோம். பிப்ரவரி மாதத்தில் அவர் அமெரிக்கா வருவார்.