உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிஸ்புல்லா தளபதி கதை முடிந்த காட்சி-திடுக் வீடியோ | Israel vs Hezbollah | Mohammed Hussein video

ஹிஸ்புல்லா தளபதி கதை முடிந்த காட்சி-திடுக் வீடியோ | Israel vs Hezbollah | Mohammed Hussein video

இஸ்ரேல், ஹிஸ்புல்லா சண்டை உச்சக்கட்டத்தில் நடக்கிறது. ஒரு வாரமாக தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களை குறி வைத்து இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஒரு வாரத்தில் ஹிஸ்புல்லாக்களின் 3 முக்கிய தளபதிகளை இஸ்ரேல் கருவறுத்து விட்டது. முதலில் ராட்வான் படை தளபதி இப்ராகிம் அகிலை போட்டுத்தள்ளியது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த இப்ராகிம் அகிலை துல்லியமாக குண்டு வீசி அழித்தது. அடுத்ததாக தெற்கு பெய்ரூட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணை படை பிரிவின் பிரதான தளபதி இப்ராகிம் குபைசியையும் இஸ்ரேல் போட்டுத்தள்ளியது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஹிஸ்புல்லாக்கள் மீண்டு வருவதற்குள், அதன் டிரோன் படை தளபதி முகமது ஹூசைன் சரூரை Mohammed Hussein Surour நேற்று இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி கொன்று விட்டது. அவருடன் டிரோன் படையின் துணை தளபதியாக இருந்த அப்பாஸ் இப்ராஹிம், ஏவுகணை பிரிவின் மூத்த பயங்கரவாதியாக இருந்தஹுசைன் ஹனியையும் போட்டுதள்ளிவிட்டோம் என்று இஸ்ரேல் இப்போது அறிவித்துள்ளது. மூன்று பேரும் பதுங்கி இருந்த கட்டடம் மீது இஸ்ரேல் துல்லியமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தும் வீடியோவையும் இப்போது வெளியிட்டு அதிர வைத்துள்ளது.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !