நிலமோசடி வழக்கில் மாஜி அமைச்சர் தம்பி கைது! | MR Vijayabaskar | land Grab Case | CBCID
கரூர், காட்டூரை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ். 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அபகரித்ததாக புகார் அளித்தார். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உட்பட 7 பேர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவானது. கேரளாவில் பதுங்கிய மாஜி அமைச்சரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது விஜய பாஸ்கருக்கு கரூர் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. விஜயபாஸ்கர் சகோதரர் சேகரும், வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். கடந்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சேகர் மனுவில் கூறி இருந்தார். சேகருக்கு முன் ஜாமின் வழங்க கூடாது. முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என போலீஸ் தரப்பு வக்கீல் வாதிட்டார்.