/ தினமலர் டிவி
/ பொது
/ மும்பையை புரட்டி போட்ட மழை வெள்ளம்! Mumbai floating | 300mm rainfall | 6 hours | Rain updates
மும்பையை புரட்டி போட்ட மழை வெள்ளம்! Mumbai floating | 300mm rainfall | 6 hours | Rain updates
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக மும்பையில் நேற்றிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த 6 மணி நேரத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவானதால், அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பஸ் சேவைகளும் முடங்கியுள்ளன.
ஜூலை 08, 2024