உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தானே அருகே மின்சார ரயிலில் பயங்கர சம்பவம்! Mumbai Local Train | falling off overcrowded

தானே அருகே மின்சார ரயிலில் பயங்கர சம்பவம்! Mumbai Local Train | falling off overcrowded

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், இன்று காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறநகர் மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தனர். தானேவை அடுத்த மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது, படிக்கட்டுகளில் தொங்கிய 10க்கும் மேற்பட்டோர் தவறி தண்டவாளத்தில் விழுந்தனர்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை