/ தினமலர் டிவி
/ பொது
/ டிஜிபி தேர்வு தொடர்பாக ஐகோர்ட்டில் அடுத்தடுத்து வழக்கு | New DGP selection | High court warns | TN
டிஜிபி தேர்வு தொடர்பாக ஐகோர்ட்டில் அடுத்தடுத்து வழக்கு | New DGP selection | High court warns | TN
ராமநாதபுரம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத் ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், டிஜிபி சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்கு வேறொருவரை தேர்வு செய்ய, தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, தமிழக அரசு, 3 மாதங்களுக்கு முன்பே பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை பட்டியலை அனுப்பவில்லை. சங்கர் ஜிவால் பணி நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது ஒருவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க வாய்ப்புள்ளது. அது சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கும் எதிரானது.
ஆக 05, 2025