கைலாசா எங்கே இருக்கு? வெளியான அறிவிப்பு | kailaasa | Nithyananda
சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளது. போலீசால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார். அதன் பிறகு கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக கூறினார். கைலாசாவை இந்துக்களுக்கான நாடாக உருவாக்கி உள்ளதாக அறிவித்தார். கைலாசாவுக்கு என தனி அரசு, தனி கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளது. கைலாசா நாட்டின் அதிபராக நான் செயல்படுவேன் என நித்யானந்தா கூறியிருந்தார். ஆனால் அந்த நாடு எங்கே இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசா அழைத்து செல்வோம் என அறிவிப்பு வெளியானது.
ஜூலை 04, 2024