உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம் | armstrong case | advocate malarkodi dismissed

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம் | armstrong case | advocate malarkodi dismissed

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம் | armstrong case | advocate malarkodi dismissed | ADMK | Palanisamy பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் தீர்த்து கட்டப்பட்டதாக தகவல் வெளியானது. கொலை நடந்த சில மணி நேரங்களில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, வக்கீல் அருள், ரவுடி திருவேங்கடம், திருமலை உட்பட 8 பேர் சிக்கினர். 8 பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்த போது, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக பெண் ஒருவருக்கும் கொலையில் முக்கிய தொடர்பு இருப்பது தெரிதது. அவர் சென்னையை சேர்ந்த வக்கீல் மலர்கொடி என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் வண்ணாரப்பேட்டை ஹரிகரன் என்பவரும் கைதானார். கொலையில் முக்கிய நபராக விளங்கும் வக்கீல் அருள் மூலம் தான் மலர்கொடி சிக்கி இருக்கிறார். அருள், அவரது மனைவி, மலர்கொடி ஆகியோர் வங்கி கணக்குகளில் பல லட்சம் ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. கைதான வக்கீல் மலர்கொடி திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் மலர்கொடி நீக்கப்படுகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை