/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம் kallakurichi| T.kunnathur| PHC| primary health centre
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம் kallakurichi| T.kunnathur| PHC| primary health centre
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது டி.குன்னத்தூர் கிராமம். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்தோறும் கர்ப்பிணிகளுக்கு செக்அப் நடக்கும். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அந்த நாளில் வந்து செல்கின்றனர் அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள் கூட இல்லை. தரையில்தான் உட்கார்ந்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீரும் இல்லை. பொது குழாயில் வரும் குடிநீரை குடத்தில் பிடித்து வைக்கின்றனர்.
ஜூலை 24, 2024