உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேச அரசின் ரியாக்ஷன் இதுதான் | Bangladesh clash | Mamata speech | Refugees|Bangladesh condemned

வங்கதேச அரசின் ரியாக்ஷன் இதுதான் | Bangladesh clash | Mamata speech | Refugees|Bangladesh condemned

நமது பக்கத்து நாடான வங்கதேசத்தில், அந்நாட்டு விடுதலை போரில் பங்கேற்று இறந்தவர்கள் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடந்த 16ம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையாக மாறியதையடுத்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர்கள் இட ஒதுக்கீட்டில் படித்து வரும் மாணவர்கள் தாக்கப்பட்டனர். மாணவர்கள் - போலீசார் மோதல் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், 197 பேர் பலியாகினர். இதையடுத்து, நாடு முழுதும் தளர்வுகளுடன் கூடிய 2 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. வங்கதேச கலவரம் குறித்து சமீபத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் நடப்பது உள்நாட்டு பிரச்னை. அங்கு ஆதரவின்றி சிரமப்படும் மக்கள் யாராக இருந்தாலும், மேற்கு வங்க கதவுகளை தட்டினால் நிச்சயம் அடைக்கலம் அளிப்போம். அங்கு வன்முறையால் பாதித்த மக்களுக்காக எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றார்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை