வாகனங்களை வழிமறித்து கைது செய்ததால் பதட்டம் | Teachers protest | Chennai
வாகனங்களை வழிமறித்து கைது செய்ததால் பதட்டம் | Teachers protest | Chennai | Police arrested teachers in advance | Trichy | தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ அலுவலகம் முன்பு 3 நாள் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள் சென்னைக்கு வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், காரில் சென்னை செல்ல முயன்ற 4 பெண் ஆசிரியைகள், தனியார் ஆம்னி பஸ்சில் சென்ற 2 பெண் ஆசிரியைகள் உள்பட 7 பேரை போலீஸார், வழிமறித்து கைது செய்தனர். 6 பெண் ஆசிரியைகளை சென்னை செல்லக்கூடாது என எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். தனியார் ஆம்னி பஸ் முசிறி துறையூர் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் கை குழந்தைகளை வைத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.