தமிழக அரசின் வாதத்தால் ஐகோர்ட் அதிருப்தி | BJP vehicle rally | Independence day
தமிழக அரசின் வாதத்தால் ஐகோர்ட் அதிருப்தி | BJP vehicle rally | Independence day | High court order | Tamilnadu police | சுதந்திர தின ஐ-பேப்பர் ஆஃபர் 50% தள்ளுபடி Subscribe Now: https://subscription.dinamalar.com/?utm_source=ytb சுதந்திர தினத்தன்று பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிட்டது. இதற்கு அனுமதி கேட்டு போலீசாரிடம் பாஜவினர் கடந்த 10ம் தேதி மனு அளித்தனர். போலீசார் அனுமதி மறுத்ததால், கோவை மாவட்ட பாஜ செயலாளர் கிருஷ்ண பிரசாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பால் கனகராஜ், குறுகலான சாலை, மேம்பால கட்டுமான பணிகளை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுப்பதாக கூறினார். இதுதொடர்பாக போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பேரணி நடத்தப்படுகிறது. பொதுநல நோக்கம் இல்லை. மேலும் தேசிய கொடி விதிகளின்படி கொடியை அவமதிக்கக் கூடாது. பெரும்பாலான காவலர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது. சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இளைஞர்களிடையே சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வுக்காக பேரணி நடத்தப்படுவதாக பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசுக்கு எதிராக எந்த கோஷமும் எழுப்பப்படாது எனவும் கூறினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பாஜ இருசக்கர வாகன பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார். சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியகொடியை கையில் ஏந்தி போராடி உயிரை விட்டவர். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொடியை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. சுதந்திர இந்தியாவில், தேசிய கோடி ஏந்திச் செல்ல அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே போலீசார் இதனை தடுக்கக்கூடாது; அதேநேரம் தேசிய கொடியை எடுத்து செல்பவர்கள் அதன் கண்ணியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கட்சி கொடியை ஏந்தி செல்ல தடை விதிக்கப்படுகிறது. பேரணியில் பங்கேற்கும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலையை போலீசாரிடம் பாஜவினர் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனைகள் விதித்தார்.