உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெவ்வேறு காரணங்கள்; போலீஸ் விசாரணையில் அம்பலம் 3 girls rescued arakkonam railway station

வெவ்வேறு காரணங்கள்; போலீஸ் விசாரணையில் அம்பலம் 3 girls rescued arakkonam railway station

வெவ்வேறு காரணங்கள்; போலீஸ் விசாரணையில் அம்பலம் 3 girls rescued arakkonam railway station railway police personal reasons ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் தனியாக நின்று கொண்டிருந்த 3 சிறுமிகளை ஒரே நாளில் அடுத்தடுத்து ரயில்வே போலீசார் மீட்டனர். அரக்கோணம் ரயில் நிலையத்தின் 2வது நடைமேடையில் நேற்று காலை 16 வயது சிறுமி இங்குமங்கும் சுற்றித்திரிவதை ரயில்வே போலீசார் கவனித்தனர். தவிப்புடன் இருந்த அவரிடம் விசாரித்த போது அரக்கோணம் அடுத்த சித்தேரியில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்ல ரயிலில் ஏறி வந்தேன்; வழி தெரியவில்லை என கண்ணீருடன் சொன்னார். உடனே சிறுமியின் தந்தைக்கு போன் செய்து அழைத்தனர். அவரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். பிற்பகலில் 1வது நடைமேடையில் 14 வயது சிறுமி நின்றிருந்தார். மிரட்சியுடன் காணப்பட்ட அந்த சிறுமியிடம் ரயில்வே போலீசார் விசாரித்தபோது, வெங்கலில் உள்ள சேவாலயா காப்பகத்தில் தங்கி இருப்பது தெரிய வந்தது. காப்பகத்தில் இருந்து தப்பித்து வந்ததாக கூறினார். இதையடுத்து காப்பக நிறுவனரிடம் சிறுமியை ஒப்படைத்த ரயில்வே போலீசார், வெங்கல் போலீசுக்கும் தகவல் அளித்தனர். காப்பகத்தில் இருந்து சிறுமி தப்பி ஓடியது ஏன்? ஏதாவது பிரச்னையா என போலீசார் விசாரிக்கின்றனர். மாலையில் 2வது நடைமேடையில் சோகத்துடன் தனியாக நின்றிருந்த 3வது சிறுமியை போலீசார் மீட்டனர். அவருக்கு வயது 16. வீட்டுக்கு தெரியாமல் தோழியை பார்க்க வந்ததாகவும், நீண்ட நேரமாக காத்திருந்தும் தோழி வரவில்லை என சொன்னார். இதையடுத்து, அந்த சிறுமியை ராணிப்பேட்டை குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பெற்றோர் வந்த பிறகு அவர்களிடம் சிறுமி ஒப்படைக்கப்படுவார் என போலீசார் கூறினர். பிடித்தமான நடிகர்களை பார்க்கவும் சின்னச்சின்ன பிரச்னைகளுக்காக வீட்டில் கோபி்த்துக்கொண்டும், தோழிகளுடன் வெளியில் சுற்றுவதற்காகவும் என பல காரணங்களுக்காக சிறுமிகள் ஓட்டம் பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையே அரக்கோணத்தில் ஒரேநாளில் 3 சிறுமிகள் தனித்தனியாக மீட்கப்பட்ட சம்பவம் காட்டுகிறது.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை