உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 52 உயிர்களை காப்பாற்றிய டிரைவர் சாமர்த்தியம் | Bus Fire | Dharapuram

52 உயிர்களை காப்பாற்றிய டிரைவர் சாமர்த்தியம் | Bus Fire | Dharapuram

52 உயிர்களை காப்பாற்றிய டிரைவர் சாமர்த்தியம் | Bus Fire | Dharapuram திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் நேற்று இரவு 9.30க்கு தாராபுரம் வந்தது. அங்கிருந்து 52 பயணிகளுடன் திருச்செந்தூர் நோக்கி கிளம்பியது. தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் கடந்து அலங்கியம் பிரிவு அருகே வந்தபோது பஸ்சில் இருந்து புகை வந்தது. டிரைவர் கணேசமூர்த்தி பஸ்சை ஓரத்தில் நிறுத்தி பயணிகளை உடனே இறங்குமாறு சத்தம் போட்டார். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் முழுக்க தீ பரவி எரிந்தது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் முழு பஸ்சும் கருகியது. பாதி வழியில் தவித்த பயணிகள் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பப்பட்டனர். அதிலும் கூட்டம் இருந்ததால் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி