உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லட்டு விஷயத்தில் பவன் கல்யாணை சீண்டும் நடிகர் பிரகாஷ் ராஜ் | Tirupati laddu issue

லட்டு விஷயத்தில் பவன் கல்யாணை சீண்டும் நடிகர் பிரகாஷ் ராஜ் | Tirupati laddu issue

லட்டு விஷயத்தில் பவன் கல்யாணை சீண்டும் நடிகர் பிரகாஷ் ராஜ் | Tirupati laddu issue | Actor Prakashraj | Andhra Dy CM | Pawan kalyan | திருப்பதி லட்டு சர்ச்சை விஷயத்தில் திரைதுறையினர் கேலி, கிண்டல் செய்வதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டித்திருந்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்தை குறிப்பிட்டு, மசூதியிலோ, சர்ச்சிலோ நடந்திருந்திந்தால் அவர் இப்படித் தான் பேசுவாரா? என்று கேட்டார். இனியும் பொறுக்க முடியாது. இந்துக்களே வெளியே வாருங்கள். சனாதனத்தை காப்பது நம் கடமை. சனாதனத்தை காக்க என் உயிரையும் கொடுக்க தயார் எனவும் பேசி இருந்தார். பவன் கல்யாண் பேசியதை வைத்து 2 நாட்களாக தொடர்ந்து கமென்ட் பதிவிடும் நடிகர் பிரகாஷ் ராஜ், இன்று மேலும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நமக்கு என்ன வேண்டும்? மக்களின் உணர்ச்சிளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதா..? அல்லது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் மென்மையாக பிரச்சனையை தீர்ப்பதா..? ஒரு வேளை தேவைப்பட்டால் நிர்வாக ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படமா? ஜஸ்ட் ஆஸ்கிங் என பதிவிட்டுள்ளார். பொறுப்பில் இருக்கும் பவன் கல்யாண், லட்டு சர்ச்சையில் தனது கருத்துகளால் மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டி வருவதாக பிரகாஷ் ராஜ் நேரடியாக சொல்லாமல் கூறி உள்ளார்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ