உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேரளாவை அதிர வைத்த சம்பவத்தில் திருப்பம் | Thrissur Gold | Cinematic style heist Kerala

கேரளாவை அதிர வைத்த சம்பவத்தில் திருப்பம் | Thrissur Gold | Cinematic style heist Kerala

கேரளாவை அதிர வைத்த சம்பவத்தில் திருப்பம் | Thrissur Gold | Cinematic style heist Kerala கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்க வியாபாரி அருண். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் இருந்து தனது உதவியாளருடன் திருச்சூர் கிளம்பினார். காரில் இரண்டரை கிலோ தங்கம் இருந்தது. திருச்சூர் கல்லிடுக்கு பகுதியை நெருங்கிய போது மூன்று பேர் கொண்ட கும்பல் காரை வழி மறித்தது. தேசிய நெடுஞ்சாலையில் இடதுபக்கம் டிரக், வலது பக்கம் இன்னொரு வாகனம் சூழ்ந்து நின்றது. கும்பலிடம் இருந்து தப்பிக்க முடியாமல் அருண் சிக்கினார். காரில் இருந்த இரண்டரை கிலோ தங்கத்தை கொடுக்க சொல்லி கொள்ளையர்கள் மிரட்டினர். அருண் தர மறுத்ததால் அவரை காரில் இருந்து வெளியே இழுத்த கும்பல் இன்னொரு காரில் ஏற்றியது. அருண் உதவியாளரும் அதே காரில் ஏற்றப்பட்டார். இதையடுத்து இருவரையும் கொள்ளை கும்பல் கடத்தி சென்றது. அருண் வந்த காரை இன்னொரு கும்பல் ஓட்டி சென்றது. சிறிது தூரம் சென்ற பின் அருண், அவரது உதவியாளர் ரோட்டில் இறக்கிவிடப்பட்டனர். இரண்டரை கிலோ தங்கம், காருடன் கொள்ளை கும்பல் மாயமானது. இந்த சம்பவம் அருண் சென்ற காருக்கு பின்னால் வந்த வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ காட்சிகளை வைத்து கேரள போலீசார் கொள்ளை கும்பலை தேடி வந்தனர். வர்கீஸ், சித்திக், நிஷாந்த், நிகில்நாத் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கொள்ளையில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இப்போது கைதான நான்கு பேரில் ரோஷன் வர்கீஸ் இன்ஸ்டாகிராம் பிரபலம் என தெரியவந்துள்ளது. கேரளாவின் திருமூலபுரத்தைச் சேர்ந்தவன் ரோஷன் வர்கீஸ். இவனுக்கு இன்ஸ்டாகிராமில் 50,000 பாலோயர்கள் உள்ளனர். ரோஷன் ஒரு மோசமான திருடன் என்பது அவரது பெரும்பாலான ரசிகர்களுக்குத் தெரியாது. பிளஸ் டூ வரை மட்டுமே படித்துள்ள இவன் மீது 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கேரளாவை தாண்டி தமிழகம், கர்நாடகாவிலும் ரோஷன் மீது திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. வழிப்பறி கொள்ளையனை இன்ஸ்டாகிராமில் 50 ஆயிரம் பாலோ செய்வது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இன்னும் பலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்களின் பின்னணி தெரியாமல் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இது எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதை ரோஷன் வர்கீஸ் போன்றவர்களின் செயல் வெளிக்காட்டுகிறது. ---------

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை