உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் மோதி பயங்கரம் | Mysuru-Darbhanga Express Train Accident | kavarapettai

சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் மோதி பயங்கரம் | Mysuru-Darbhanga Express Train Accident | kavarapettai

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில் நுட்ப கோளாறால் இரண்டரை மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் பத்திரமாக திருச்சியிலேயே தரை இறங்கியது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து தமிழகம் மீள்வதற்குள், பயங்கர ரயில் விபத்து நடந்து அதிர வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தமிழகம் வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லும் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் விபத்துக்குள்ளானது. அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் வரை தடம் புரண்டன. மோதிய வேகத்தில் 4 ஏசி பெட்டிகள் தீப்பிடித்தன. பயணிகள் அலறியடித்து ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள், ரயில்வே ஊழியர்கள், போலீசார், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை