அடுத்து வர்றது என்ன? சென்னைக்கு புது எச்சரிக்கை next rain alert for chennai | chennai weather today
அடுத்து வர்றது என்ன? சென்னைக்கு புது எச்சரிக்கை next rain alert for chennai | chennai weather today பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சத்தமின்றி கரையை கடந்தது. கரை கடந்ததுமே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் இன்னும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் முதலே சென்னையில் பல இடங்களில் மழை இல்லை. இன்று காலையில் வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்து விட்டாலும், அடுத்த மழை இன்று மாலை ஆரம்பிக்கும் என்று தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்த பகுதியின் தெற்கில் சென்னை உள்ளது. இதனால் மேற்கில் இருந்து தரைக்காற்று வீசும். தரைப்பகுதியில் இருக்கும் மேகங்கள் சென்னையை நோக்கி நகரக்கூடும். எனவே வெப்பச்சலன முறையில் இன்று மாலையில் மீண்டும் மழை ஆரம்பிக்கும். நாளை காலை வரை இந்த மழை நீடிக்கும். சென்னை மட்டும் இன்றி விழுப்புரம், கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் மழை கிடைக்கும். சில இடங்களில் மழை பெய்யாது என்று வெதர்மேன் கூறி உள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை பகுதியில் கரை கடக்க இருந்ததையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்து இருந்தது. பின்னர் அதை வாபஸ் பெற்றுக்கொண்டு, ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது. அதாவது, இம்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.