உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏற்பாடுகள் எப்படி இருக்கு? பார்வையிட்ட நடிகர் விஜய் TVK| actor vijay| illaya thalapathi

ஏற்பாடுகள் எப்படி இருக்கு? பார்வையிட்ட நடிகர் விஜய் TVK| actor vijay| illaya thalapathi

ஏற்பாடுகள் எப்படி இருக்கு? பார்வையிட்ட நடிகர் விஜய் TVK| actor vijay| illaya thalapathi விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. நாளை மாலை மாநாடு தொடங்கும் அனைத்து ஏற்பாடுகளும் பெரும்பாலும் முடிந்துவிட்டன. தலைமை செயலகத்துடன் கூடிய பிரமாண்ட நுழைவு வாயில்; 100 அடி கொடிக்கம்பம், எல்இடி திரைகள், ரேம்ப் வாக் மேடையுடன் கூடிய பிரமாண்ட மேடை; குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்ட சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்னொளியில் அந்த இந்தமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள், தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வரத்தொடங்கி உள்ளனர். விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் விடுதிகளை மாநாட்டிற்கு வருபவர்கள் புக்கிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரூம்கள் கிடைக்காதவர்கள், வி.சாலை பகுதியில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இதனிடையே, மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் வருகை தந்துள்ளார். மாநாடுக்கு செய்யப்பட்டு உள்ள அனைத்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். கேரவேனில் வந்த விஜய் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்த்தார். கேரவேனில் இருந்தபடியே நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். விஜயின் பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தவெக மாநாட்டுக்கு அதிகளவில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என சுங்கசாவடி அறிவித்துள்ளது.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை